கிருஷ்ணகிரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
ஆன்மிக இலக்கிய மன்றம் சார்பில் கிருஷ்ணகிரியில் பாரதியார் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆன்மிக இலக்கிய மன்றம் சார்பில் கிருஷ்ணகிரியில் பாரதியார் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தலைவர் கே.பிருத்திவிராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு வாசல் உதயம் மாத இதழாசிரியர் உத்தமசோழன், மகாகவியின் நாட்டுப் பற்று என்ற தலைப்பில் பேசினார். பாரதி மூத்த அறிஞர் சீனி விஸ்வநாதனுக்கு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அறக்கட்டளையின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை அதன் நிறுவனர் கி.தியாகராஜன் வழங்கினார்.
பாரத தேசம் என தமிழ் மொழியில் முதல் முதலில் பதிவு செய்தவர் பாரதியார். பாரதியார் மொழியறிவு கொண்டவர், பல மொழிகளை அறிந்தவர் என நிகழ்ச்சியில் பாரதியின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டது. ஆன்மிக இலக்கிய மன்றத்தின் தலைவர் கே.பிருத்திவிராஜ், செயலாளர் ஆர்.சிவதாஸ், பொருளாளர் ஜெயந்தி ஸ்ரீதரன், மருத்துவர் எஸ்.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரதியார் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் தேர்வு பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.