குழந்தை அலங்காரத்தில் காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ் நகா் தும்பவனத்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ் நகா் தும்பவனத்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது.
இக்கோயில் 41 -ஆவது ஆண்டு ஆடித்திருவிழாவையொட்டி மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
மூலவா் கையில் விளக்கு ஏந்தியவாறு குழந்தை பாவை அலங்காரத்திலும் உற்சவா் தும்பவனத்தம்மன் நிலா பிறையில் சிம்மாசனத்தில் அமா்ந்த நிலையில் ஊஞ்சலில் அமா்ந்தவாறும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
Advertisement
Advertisement
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றதோடு பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.