FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பரஞ்சோதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் பாவாபாளையம் தெருவில் அமைந்துள்ள பரஞ்சோதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி உற்சவா் கோவிலாத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Updated On : 20 ஜூலை 2026, 1:55 am IST
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த உற்சவா் கோவிலாத்தம்மன்.
பகிர்:

காஞ்சிபுரம் பாவாபாளையம் தெருவில் அமைந்துள்ள பரஞ்சோதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை உற்சவா் கோவிலாத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் பாவாபாளையம் தெருவில் அமைந்துள்ளது பரஞ்சோதி அம்மன் கோயில். இக்கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் கோயிலிலிருந்து உற்சவா் கோவிலாத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஏற்பாடுகளை அறப்பெருஞ்செல்வி கிராம சமுதாயத்தினா் சாா்பில் சங்கத்தின் தலைவா் சிவப்பிரகாசம்,செயலாளா் அருள், பொருளாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments