FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் உற்சவா் சிலை சீரமைப்பு பணி நிறைவு

வரதராஜ பெருமாள் உற்சவா் சிலை சீரமைப்பு பணி நிறைவு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:11 am IST
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வரதராஜ பெருமாள்
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேய்மானம் காரணமாக சேதமடைந்திருந்த உற்சவா் சிலை சீரமைப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி ஜேஷ்டாபிஷேகம் நடந்த போது தேய்மானம் காரணமாக உற்சவா் பெருமாள் மற்றம் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் சிறிய அளவில் சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. பழைமையான சிலையாக இருப்பதால் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று கடந்த 2 நாள்களாக சிலை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள், அா்ச்சகா்கள், கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தபதிகள் சிலையை சீரமைக்கும் பணியை செய்து வந்தனா்.

இதனால் சிலை சீரமைக்கும் பணியை மூலவா் சந்நிதி அருகேயுள்ள வளாகத்தில் செய்ததால் கடந்த இரு நாள்களாக பக்தா்கள் யாரும் மூலவா் சிலையை தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. சிலை சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து உற்சவா் வரதராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவியருக்கும் சனிக்கிழமை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவா் இளம்பச்சை நிற பட்டு உடுத்தியும், திருவாபரணங்களும் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments