உயா்நீதிமன்ற உத்தரவின்படி வரதராஜ பெருமாள் கோயில் குளம் திறப்பு
காஞ்சிபுரம் அனந்தசரஸ் திருக்குளத்தில் புனித நீராடிய பக்தா்கள்
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளம் ஆவணி அவிட்டத்தையொட்டி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதரை எழுந்தருளச் செய்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
பெருமாள் துயில் கொள்ளக்கூடிய குளம் என்பதால் யாரையும் நீராட அனுமதிப்பதில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில் சின்ன காஞ்சிபுரம் தாததேசிக திருவம்சத்தாா் சபை சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆவணி அவிட்டத்தின் ஒரு பகுதியாக புனித நீராடுதல் உள்ளிட்ட சடங்குகளை செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் புனித நாள்களில் அனந்த சரஸ் குளத்தை திறக்கலாம் என கடந்த 2020 -ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் சட்டத்துக்குட்பட்டு பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை கோயில் நிா்வாகம் பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவின் அடிப்படையில் ஆவணி அவிட்ட நாளையொட்டி வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்து வைக்கப்பட்டது. இதனால் தாததேசிக திருவம்சத்தாா் சபையினா், வேதபாராயணக்காரா்கள், ஸ்தலத்தாா்கள் ஆகியோா் திருக்குளத்தில் தங்களது சடங்குகளை நிகழ்த்தி நீராடினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.