வீட்டின் கதவை உடைத்து திருட்டு
பேரிகை அருகே வீட்டின் கதவை உடைத்து செல்லிடப்பேசி மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பேரிகை அருகே வீட்டின் கதவை உடைத்து செல்லிடப்பேசி மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், நடுகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (54). இவர் பேரிகை அருகே உள்ள நாரிபுரம் கிராமத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ஒரு செல்லிடப்பேசி மற்றும் ரூ.600 ஐ திருடிச் சென்றனர். புகாரின்பேரில் பேரிகை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராம நரசிம்மன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.