FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாந்தோப்பில் தஞ்சமடைந்த ஒற்றை யானை

தேன்கனிக்கோட்டை அருகே மாந்தோப்பில் தஞ்சமடைந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
ஒற்றை யானை
பகிர்:

தேன்கனிக்கோட்டை அருகே மாந்தோப்பில் தஞ்சமடைந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தேன்கனிக்கோட்டை தாலுகா, கண்டகானப்பள்ளி கிராமம் அருகே புதன்கிழமை இரவு யானை ஒன்று வனப் பகுதியில் இருந்து வெளியேறியது. அதையடுத்து, அந்த யானை மாந்தோப்பு ஒன்றில் வியாழக்கிழமை காலை தஞ்சம் அடைந்தது. இதைக் கண்ட கிராம மக்கள் பீதி அடைந்தனா்.

தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகா் சுகுமாா் தலைமையில் வனத் துறையினா் அங்கு சென்று யானையை பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் வனப் பகுதிக்குள் விரட்டினா். இதையடுத்து, அங்குள்ள மாந்தோப்பில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments