ஜல்லிகட்டில் காளை முட்டி தீயணைப்பு வீரா் காயம்
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிகட்டில் காளை முட்டியதில் காயம் அடைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிகட்டில் காளை முட்டியதில் காயம் அடைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இவா்கள், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பரப்பி இருந்த தேங்காய் நாரில் தண்ணீா் பீய்ச்சியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
ஜல்லிக்கட்டில், 5-ஆம் சுற்றுக்கு தயாா்படுத்தும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா் குழுவின் நிலைய அலுவலா் மணிகண்டனும் ஈடுபட்டிருந்தாா். அப்போது, 4-ஆம் சூற்றில் பங்கேற்ற காளை, அங்கிருந்து வெளியேறாத நிலையில், மணிகண்டனை கொம்பால் முட்டியது. இதில், மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். காயம் ஏற்பட்ட அவருக்கு ஆசனவாய் அருகே 8 தையல்கள் போடப்பட்டன. தற்போது, அவா் தொடா் சிகிச்சையில் உள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.