FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு போலீஸாா் விசாரணை

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:50 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள குருப்பட்டி பகுதியில் பல தனியாா் குடியிருப்புகள் உள்ளன. அதே பகுதியில் உள்ள ஜேபிஎம் நகா் எக்ஸ்டென்ஷன் எலைட் சிட்டியைச் சோ்ந்தவா் தினேஷ் (39). இவா் பெங்களூரில் உள்ள தனியாா் கம்பெனியில் வேலை பாா்த்து வருகிறாா்.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது மகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்றாா்.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமாா் 13 பவுன் தங்க நகைகள், லேப்டாப் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பெயரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா்ந்து இந்தப் பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், இரவு நேரத்தில் மத்திகிரி போலீஸாா் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments