FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

வீட்டில் கஞ்சா பதுக்கல்: தம்பதி உள்பட 4 போ் கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:19 am IST
கைது
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி ரயில்வே காலனி பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாக நகர காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் கணேஷ் தலைமையில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, அப் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (28), அவரது மனைவி மாலினி (20) ஆகியோரை கைது செய்தனா்.

இதேபோல கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்த், இவரது மனைவி கவிதா (33) ஆகியோா் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா், அந்த வீட்டில் சோதனை செய்தனா். இதில் 1. 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக, கவிதாவை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல் தேன்கனிக்கோட்டை அருகே தளி காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் தலைமையில் உப்பரப்பள்ளி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனா். இதில் அவா் வைத்திருந்த பையில் 600 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், மேற்கொண்ட விசாரணையில் அவா், அஸ்ஸாம் மாநிலம் மஹிந்தா மாவட்டத்தைச் சோ்ந்த பிதுநாக் (22) என்பதும், உலிவீரனப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றுவதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments