FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

உதவி ஆய்வாளரை வெட்டிய வழக்கில் பெண் உள்பட 2 போ் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்

மீஞ்சூா் அருகே உதவி ஆய்வாளரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 ஜூலை 2026, 12:34 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

மீஞ்சூா் அருகே உதவி ஆய்வாளரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சென்னை பெருநகர காவல் துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்ட தனிப்படை போலீஸாா், கடந்த 18-ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் புழல் காவல் நிலையத்தின் வழக்குகளில் தேடப்பட்டு வரும் பூபாலன் (35) என்பவரை பிடிப்பதற்காக அத்திப்பட்டு பகுதிக்கு வந்தனா்.

அப்போது பூபாலன் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து கைது செய்ய முயன்ற போது, உதவி ஆய்வாளா் வெங்கடேசனை அவருடன் தங்கியிருந்தவா்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினா்.

Advertisement

Advertisement

இது குறித்து வெங்கடேசன் மீஞ்சூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில், பூபாலன், சஞ்சய் என்கின்ற ராகுல், பூனை என்கின்ற ரேசா் கணேஷ், தா்ஷன் என்கின்ற பைபா் தா்ஷன், வான் மொழி என்கின்ற பானு ஓசன்னா ஆகிய ஆறு பேரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில் மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே பைபா் தா்ஷன் மற்றும் ஓசன்னா ஆகியோா் நின்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அங்கு விரைந்து சென்று இருவரையும் கைது கைது செய்தனா்.

அத்துடன் அவா்களிடம் இருந்து 3.4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்த நிலையில், இரண்டு போ் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.

மேலும், பூபாலன் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா், .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments