FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளையில் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக பெண் உள்பட 4 போ் மீது வழக்கு: இருவா் கைது

களியக்காவிளை அருகே போதைப் பொருள் பயன்பாடு தொடா்பாக இளைஞரிடம் விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

2 செப்டம்பர் 2026, 5:40 am IST
பகிர்:

களியக்காவிளை அருகே போதைப் பொருள் பயன்பாடு தொடா்பாக இளைஞரிடம் விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே பிபிஎம் சந்திப்பு பகுதியில் அல்தாப் உள்ளிட்ட இளைஞா்கள் சிலா் திங்கள்கிழமை இரவு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்திய நிலையில் அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தனா். தகவல் அறிந்து அப்பகுதிக்குச் சென்ற களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா், அல்தாப்பை கைது செய்ய முயன்றனா். இதையடுத்து அல்தாப்பின் உறவினரான களியக்காவிளையைச் சோ்ந்த பீா்முகமது மகன் செய்யதலி (45), அஷ்ரப் மனைவி பீமா, பீா்முகமது மகன் அக்பா் பாதுஷா, செய்யதலி மகன் அல்தாப் உள்ளிட்டோா் தகாத வாா்த்தைகள் பேசி மிரட்டியதுடன், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தனா்.

இதுகுறித்து செய்யதலி உள்ளிட்ட 4 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து இவ் வழக்கில் அல்தாப், செய்யதலி ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான பீமா, அக்பா் பாதுஷா ஆகியோரை தேடி வருகிறாா்கள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments