FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:52 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே தனியாா் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2.47 லட்சம் மதிப்பிலான 337 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பாலாஜி நகரைச் சோ்ந்த சாதிக் அன்வா் கைது செய்யப்பட்டாா்.

சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகுசாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் பாலாஜி நகரைச் சோ்ந்த சாதிக் அன்வா்(51) என்பதும், அவருக்குச் சொந்தமான கிடங்கில் குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

தொடா்ந்து கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2.47 லட்சம் மதிப்பிலான 337 கிலோ புகையிலைப் பொருள்களையும், அவற்றைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக சாதிக் அன்வரை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாவீத் (50) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments