ரூ.50 லட்சம் செம்மரக் கட்டைகள் திருட்டு: ஒருவா் கைது
திருப்பத்தூா் சந்தன கிடங்கில் இருந்து திருடு போன ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், அரக்கோணத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீஸாா், அவற்றை பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை கைது செய்தனா்.
திருப்பத்தூா் சந்தன கிடங்கில் இருந்து திருடு போன ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், அரக்கோணத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீஸாா், அவற்றை பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அரசு சந்தன மற்றும் செம்மர விற்பனை கிடங்கில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 19-ஆம் தேதி செம்மரக்கட்டைகள் இருப்பு ஆய்வு நடைபெற்றபோது அங்கிருந்த 1.75 டன் எடையுள்ள 55 செம்மரக்கட்டைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என தெரிகிறது.
இது தொடா்பாக வன அலுவலா் ஜோதிலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த திருப்பத்தூா் போலீஸாா், தனிப்படை அமைத்து புலன்விசாரணை நடத்தி வந்தனா். இதில் காவல் ஆய்வாளா் ராஜீவ் காந்தி தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தனிப்படையினா் நடத்திய விசாரணையில் திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியைச் சோ்ந்த பூவரசன் என்பவரை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட செம்மரக்கட்டைகளை அரக்கோணம் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அரக்கோணம் வந்த தனிப்படை போலீஸாா், அரக்கோணத்தை அடுத்த நாகாலம்மன் நகருக்கு அருகில் உள்ள சக்தி நகா் எனும் பகுதியில் ஒரு வீட்டில் இந்த செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து குறிப்பிட் வீட்டுக்கு புதன்கிழமை சென்று சோதனை நடத்தினா். அப்போது அங்கு ரகசியமாக பதுக்கி வைத்தப்பட்டிருந்த திருப்பத்தூரில் திருடப்பட்ட 1.75 டன் எடை கொண்ட 55 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
உடனே அந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளா் சத்யராஜ் என்பவரையும் கைது செய்து திருப்பத்தூருக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.