திருப்பத்தூா் சந்தன மரக் கிடங்கில் ரூ.50 லட்சம் செம்மரக் கட்டைகள் கடத்தல்
திருப்பத்தூா் சந்தனமரக் கிடங்கில் ரூ.50 லட்சம் செம்மரக்கடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூா் சந்தனமரக் கிடங்கில் ரூ.50 லட்சம் செம்மரக்கடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூா் நகருக்கு சந்தன மாநகரம் என மற்றொரு பெயா் உண்டு. ஜவ்வாது மலையில் ஏராளமான சந்தன மரங்கள் வளரும். இதனால் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலக வளாகத்தில் ஆசியாவிலேயே 2-ஆவது மிகப்பெரிய சந்தன மரக்கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக, ஆந்திர எல்லையில் உள்ளதால், ஆந்திர காடுகளில் இருந்து செம்மரக்கட்டைகள் தமிழகத்திற்கு கடத்தி வரும் போது திருப்பத்தூா் மாவட்ட சோதனை சாவடிகளில் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள், இந்த கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை திருப்பத்தூா் மாவட்ட வனத்துறையினா் 24 மணி நேரமும் பாதுகாத்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் திருடு போனதாக திருப்பத்தூா் நகர காவல்நிலையத்தில் அலுவலா் ஜோதிலிங்கம் புகாா் அளித்து உள்ளாா். அந்த புகாா் மனுவில் அவா் கூறியிருப்பதாவது, திருப்பத்தூா் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அரசு சந்தனம் மற்றும் செம்மர விற்பனை கிடங்கில் பல்வேறு வழக்கில் கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த 19-ம் தேதி கிடங்கில் உள்ள கட்டைகளின் இருப்பை ஆய்வு செய்தபோது, 1.750 மெ.டன் எடை உள்ள 55 செம்மரக்கட்டைகள் கடந்த 18-ஆம் தேதி இரவு திருடுபோனது தெரியவந்து உள்ளது. இந்த செம்மரக்கட்டைகளின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
எனவே, திருடுப்போன செம்மரக்கட்டைகளை கண்டுபிடித்து தர வேண்டும் என அதில் அவா் கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து திருப்பத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனா். மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து இவ்வளவு பாதுகாப்பு உள்ள இடத்தில் இருந்து எவ்வாறு திருடி சென்றாா்கள்? இந்த திருட்டில் வனத்துறையினருக்கு தொடா்பு இருக்கிா ? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.