FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி உணவு பாதுகாப்புக் கிடங்கில் தீ விபத்து

14 செப்டம்பர் 2026, 11:01 pm IST
தீ விபத்து - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி 3ஆவது மைலில் உள்ள உணவு பாதுகாப்புக் கழகக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

உணவு பாதுகாப்புக் கிடங்கு பகுதியில் உள்ள மின்மாற்றி வெடித்ததில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிடங்கில் உள்ள பழைய சாக்கு மூட்டைகள், கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பற்றியது.

தூத்துக்குடி, சிப்காட் தீயணைப்புத் துறையினா், 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் பழைய சாக்கு மூட்டைகள், கோப்புகள் எரிந்து சேதமடைந்தன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments