FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விருத்தாசலத்தில் 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதம்

8 செப்டம்பர் 2026, 2:17 am IST
விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் திறந்தவெளி கிடங்கில் முளைவிட்டுள்ள நெல் மூட்டைகள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து திறந்தவெளி கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதம் அடைந்துள்ளன.

திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்களில் போதுமான தாா்பாய் மற்றும் கிடங்கு வசதிகள் இல்லாததால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து

முளைத்து வீணாவது தமிழகத்தில் வாடிக்கையாக உள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அல்லது பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் திறந்த வெளியில் நீண்ட நாள்களாக வைத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். தொடா் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக நெல் மணிகள் சீக்கிரம் முளைத்து விடுகின்றனா்.

Advertisement

Advertisement

இப்படித்தான் விருத்தாசலத்திலும் 10ஆயிரம் மூட்டைகள் நெல் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

விருத்தாசலம் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் ராஜேந்திரப்பட்டினம் பகுதியில் திறந்த வெளிக் கிடங்கில் அடுக்கி வைத்துள்ளனா். மேலும், அதேபகுதியில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனா். இப்பகுதியில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் மழை பெய்தது. மழையில் சுமாா் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துள்ளது.

விவசாயிகளின் கடும் உழைப்பால் விளைவித்த நெல் வீணாவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தர மேற்கூரை கொண்ட சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.

இதே பகுதியில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ள விவசாயிகள் வைத்துள்ள நெல் குவியல்கள்.
இதே பகுதியில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ள விவசாயிகள் வைத்துள்ள நெல் குவியல்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments