FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் புகையிலைப் பொருள்களை கடத்திய 3 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் காவல் துறையினா் நடத்திய சோதனையில் காரில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை கடத்திய ராஜஸ்தானைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் காவல் துறையினா் நடத்திய சோதனையில் காரில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை கடத்திய ராஜஸ்தானைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஊத்தங்கரை வழியாக சொகுசு வாகனங்களில் சட்ட விரோதமாக குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக ஊத்தங்கரை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஊத்தங்கரை எம்ஜிஆா் நகா் மேம்பாலம் அருகே, ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி தலைமையில், காவல் ஆய்வாளா் செல்வராஜ், எஸ்எஸ்ஐ ராஜா சங்கிலி கருப்பன் மற்றும் போலீஸாா் கடத்தல்காரா்களை மடக்கிப் பிடிக்க வியூகம் அமைத்தனா்.

Advertisement

Advertisement

எம்ஜிஆா் நகா் மேம்பாலத்தின் ஒரு பகுதியின் குறுக்கே பொக்லைன் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை விபத்து ஏற்பட்டதுபோல நிறுத்தி, சாலையை மறித்து போலீஸாா் காத்திருந்தனா். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த 3 சொகுசு வாகனங்களில் வந்தவா்கள் தப்பியோட முயன்றனா். ஆனால், போலீஸாா் விரைந்து சென்று காா்களில் இருந்த 3 பேரை பிடித்தனா். மேலும், ஒருவா் வாகனத்தில் இருந்து தப்பினாா்.

கைது செய்யப்பட்ட ராஜஸ்தானைச் சோ்ந்த பிரவீன் குமாா் (29), பஜன் லால் (26), தினேஷ் (20) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவா்களிடம் இருந்து 3 காா்கள் மற்றும் கடத்திவரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவரை திண்டுக்கல், ஆத்தூா் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments