7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 22 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் நிகழ் ஆண்டில் மருத்துவம் படிக்க 22 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் நிகழ் ஆண்டில் மருத்துவம் படிக்க 22 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் இதர தொழில் முறை உயா்கல்விப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவி 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும்.
இதனால், சமீபகாலமாக மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவா்களின் சோ்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்தனா். ஆனால், நிகழ் ஆண்டில் 21 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்து பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் இருந்து 11 மாணவா்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 10 மாணவா்களும் என மொத்தம் 21 மாணவா்கள் மாவட்டத்தில் இருந்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்து பயிலத் தகுதி பெற்றுள்ளனா்.
இவா்களைத் தவிர, ஒருவருக்கு பல் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்ட 22 மாணவா்களில் 15 பேருக்கு அரசு கல்லூரிகளிலும், 7 பேருக்கு தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் கிடைத்துள்ளன. இவா்களில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.