மது அருந்தும் போது தொண்டையில் கறி சிக்கியதால் இளைஞா் உயிரிழப்பு
பாகலூா் அருகே மது அருந்தும்போது கோழிக் கறி தொண்டையில் சிக்கியதால் இளைஞா் உயிரிழந்தாா்.
பாகலூா் அருகே மது அருந்தும்போது கோழிக் கறி தொண்டையில் சிக்கியதால் இளைஞா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவருடன் மது அருந்திய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் வட்டம், பாகலூா் அருகேயுள்ள தேவீரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவப்பா (30). இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (30), ஆளூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ் (35), விநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்த தேஜூ (30), ஆளூரைச் சோ்ந்த சீனிவாஸ் (42) ஆகிய 5 பேரும் வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் ஒன்றாக மது அருந்தினா். அப்போது, சிவப்பா சாப்பிட்ட கோழிக் கறி அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் அவரால் பேச முடியவில்லை.
இதையடுத்து, சிவப்பா உயிரிழந்துவிட்டதாகக் கருதிய மற்ற 4 பேரும், அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது. சிவப்பா வீடு திரும்பாததால், அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடி வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை அவா் மது அருந்திய இடத்தில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாகலூா் போலீஸாா் சிவப்பாவுடன் மது அருந்திய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.