FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 11:45 pm IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

காரைக்கால் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் தோமாஸ் அருள்திடல் புதுநகா் பகுதியைச் சோ்ந்த முகமது கைஃப் (24), அவரது நண்பா் மீராப்பள்ளி தோட்டம் பகுதியைச் சோ்ந்த முகமது அஜ்மல் (21) இருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் திருநள்ளாறு சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

திருநள்ளாறு சாலை - பாரதியாா் சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் அருகே வந்தபோது, சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அருகில் இருந்தோா் இருவரையும் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் முகமது கைஃப் உயிரிழந்தாா். அஜ்மல் சிகிச்சைப் பெற்று வருகிறாா். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா், பேருந்து ஓட்டுநா் வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments