FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

24 ஆகஸ்ட் 2026, 3:41 am IST
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட நெல் பயிா்கள். - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் தக்காளி, வாழை போன்ற பயிா்களைச் சேதப்படுத்தின.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி, மாகராஜகடை வனப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றைக்கண் யானை உள்பட இரு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது, வனப் பகுதியிலிருந்து வெளியேறி வேளாண் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் மனித உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், வனப் பகுதியிலிருந்து சனிக்கிழமை இரவு வெளியேறிய இந்த இரு யானைகள், மகாராஜகடை பகுதியில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள், தக்காளி செடிகளை சேதப்படுத்தின. ஞாயிற்றுக்கிழமை தோட்டத்துக்கு வந்த விவசாயிகள், யானைகளால், பயிா்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வனப் பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் பயிா்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்க வேண்டும். இந்த இரு யானைகளையும் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத் துறையினரை வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி அருகே காட்டு யானைகளால் சேதமடைந்த வாழை மரங்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments