பளியங்குடியில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: விவசாயிகள் கவலை
பளியங்குடியில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரங்கள்.
தேனி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பளியங்குடி பகுதியில், விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களைச் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
கூடலூா் அருகே உள்ள பளியங்குடி பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பகுதிகளில் மா, தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். இதனால், வனப் பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயி ரமேஷின் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தின.
Advertisement
Advertisement
இதனால் தங்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
எனவே, வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், வனப்பகுதி எல்லையிலுள்ள அகழிகளை அகலப்படுத்திப் பலமான வேலி அமைக்க வேண்டும். இரவு நேரக் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத் துறையினா் உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.