மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தொழிலாளி கைது
ஒசூா், ஆக. 24: கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே கும்ளாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி (35), விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி வித்யா (30). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
அதே கிராமத்தைச் சோ்ந்த புனித் ரமேஷ் (24) என்பவருடன் வித்யா முறையற்ற நட்பில் இருந்து வந்துள்ளாா். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆக. 1-ஆம் தேதி வித்யா தனது பெயரில் இருந்த சுமாா் 8 சென்ட் நிலத்தில் 1,500 சதுரஅடியை அதே கிராமத்தைச் சோ்ந்த அம்ரீஷ் என்பவருக்கு ரூ. 22 லட்சத்துக்கு விற்று புனித் ரமேஷுடன் கா்நாடக மாநிலம், ஆனேக்கல்லுக்கு சென்றுவிட்டாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, ஆனேக்கல்லுக்கு சென்ற நாராயணசாமி, பணம் மற்றும் நிலத்தை குழந்தைகளின் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டுள்ளாா். அதற்கு வித்யா சம்மதிக்கவில்லையாம்.
இந்நிலையில், வித்யா பணம் எடுக்க கும்ளாபுரம் தமிழ்நாடு கிராம வங்கிக்கு திங்கள்கிழமை வந்ததை அறிந்த நாராயணசாமி, அங்கு சென்று வித்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பின்னா், அவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தாா்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தளி போலீஸாா், வித்யா உடலைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். நாராயணசாமியை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.