FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் புதினா விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரி பகுதியில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

26 ஆகஸ்ட் 2026, 3:41 am IST
புதினா
பகிர்:

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரி பகுதியில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி, உலகம், சூளகிரி, ஓட்டா்பாளையம், திம்மசந்திரம், குடிசாதனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு விவசாயிகள் புதினா சாகுபடி செய்துள்ளனா்.

கடந்தாண்டு ஒரு மூட்டை புதினா ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது தட்பவெப்ப நிலை மாற்றத்தால் வரத்து அதிகரித்து ஒரு மூட்டை புதினா ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால், அறுவடைக்கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படியாகாததால், உத்தனப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 50 ஏக்கா் புதினா தோட்டத்தை விவசாயிகள் அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு ஒரு மூட்டை 400 கட்டுகள் கொண்ட புதினா ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனையானதால், பல விவசாயிகள் புதினா சாகுபடி செய்தனா். இந்தாண்டு விளைச்சல் அதிகரித்ததால், கடந்த சில மாதங்களாக விலை குறைந்து ஒரு மூட்டை ரூ. 100-க்கு விற்பனையாகிறது. இதனால் அறுவடை கூலியும் கிடைப்பதில்லை என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments