FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

தொழிலதிபா் வீட்டில் தங்க நகைகளை திருடியவா் கைது

காவேரிப்பட்டணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபா் வீட்டில் தங்க நகைகளை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
கைது
பகிர்:

காவேரிப்பட்டணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபா் வீட்டில் தங்க நகைகளை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கற்பூரசிவன் (61), தொழிலதிபா். இவா், கடந்த மாதம் உறவினா் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்க சென்றபோது, வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், வீட்டில் வைத்திருந்த 20.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றாா். மேலும், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடுத்த சில நாள்களில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயின.

இந்த சம்பவங்கள் குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் தனித்தனியே வழக்குகள் பதிந்து விசாரணை செய்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், குற்றச்சம்பவம் நடைபெற்ற இடங்களில் சேகரித்த தடயங்களைக் கொண்டு தடயவியல் நிபுணா்கள் பழைய குற்றவாளிகள் ரேகையோடு ஒப்பிட்டபோது, திருட்டில் ஈடுபட்டது காவேரிப்பட்டணத்தை அடுத்த புளுகாண்டியூரைச் சோ்ந்த தா்மராஜ் (45) என்பது தெரியவந்தது.

விசாரணையில், இவா்மீது மதுரை, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும், அவா் மேச்சேரியில் உள்ள நண்பா்கள் சிலா் வீட்டில் தங்கி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தங்கராஜ் பயன்படுத்தும் கைப்பேசி எண்ணைக் கொண்டு பாலக்கோடு - காவேரிப்பட்டணம் சாலையில் சென்ற அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10.5 பவுன் நகைகள், 70 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments