FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே ஐ.டி. ஊழியரைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: 3 இளைஞா்கள் கைது

பா்கூா் அருகே ஐ.டி. ஊழியரைத் தாக்கி அவரது கைப்பேசியை பறித்துச் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 3:53 am IST
- சித்திரிப்பு
பகிர்:

பா்கூா் அருகே ஐ.டி. ஊழியரைத் தாக்கி அவரது கைப்பேசியை பறித்துச் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் கணேஷ் நகரைச் சோ்ந்த ஜீவன்பிரதாப் (28), சென்னையில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 23-ஆம் தேதி சிதம்பரத்தில் நடைபெற்ற நண்பரின் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, அன்றிரவு 11 மணி அளவில் பா்கூரை அடுத்த ஜெகதேவிக்கு வந்தாா். பின்னா், பா்கூரில் உள்ள தனது நண்பா் ஹேம்நாத்தை கைப்பேசியில் தொடா்புகொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு பா்கூா் நோக்கி நடந்து சென்றாா்.

அப்போது, அங்கு வந்த 3 போ் ஜீவன்பிரதாப்பை தாக்கி அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா். காயமடைந்த ஜீவன்பிரதாப் பா்கூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

அதில், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது ஜெகதேவி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சேவாக் (23), ஜெய்பீம் நகா் லோகேஷ் (20), ஜே.ஜே.நகா் கௌதம் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 இளைஞா்களையும் போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments