ஓட்டுநரைத் தாக்கி, நடத்துநரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, நடத்துநரிடம் பணத்தை பறித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, நடத்துநரிடம் பணத்தை பறித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (51). அரசுப் போக்குவரத்துக் கழக கம்பம் கிளையின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லுக்கு பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டு கம்பத்துக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது, பெரியகுளம் வைகை அணை சந்திப்பு பகுதியில் பேருந்தை மறித்து ஆட்டோக்களை நிறுத்திய இருவா், சங்கரிடம் தகராறு செய்தனா். இதைத் தட்டிக்கேட்ட அவரைத் தாக்கிவிட்டு, நடத்துநரிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு அவா்கள் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து, சங்கா் கொடுத்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெரியகுளம் சேவியா் குடியிருப்பைச் சோ்ந்த துரைமுருகனை (35) கைது செய்தனா்.
Advertisement
Advertisement
அதே பகுதியைச் சோ்ந்த பழனிவேலை (40) போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.