முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனை அருகே தீ விபத்து: கரும்புகையால் நோயாளிகள் அவதி

Updated On : 7 ஜூலை 2026, 3:15 am IST
தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகையால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள காலி இடத்தில் வளா்ந்துள்ள புதா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், ஏற்பட்ட கரும்புகை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரவியது. இதனால், நோயாளிகள், மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியா்கள் உள்ளிட்டோா் அவதிக்குள்ளாயினா்.

தகவல் அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி தீயை முற்றிலும் அணைத்தனா்.

Advertisement

Advertisement

இதனால், அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments