FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மா விவசாயிகளுக்கு மானியம்: அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு

மாங்கூழ் தயாரிக்க மாம்பழங்களை வழங்கும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 4 மானியம் வழங்கும் அரசின் அறிவிப்பை கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

Updated On : 10 ஜூலை 2026, 4:10 am IST
கோப்புப்படம்.
பகிர்:

மாங்கூழ் தயாரிக்க மாம்பழங்களை வழங்கும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 4 மானியம் வழங்கும் அரசின் அறிவிப்பை கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

மாம்பழத்துக்கு நிலையான கொள்முதல் விலை இல்லாததால் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். மா விவசாயிகளைக் காப்பாற்ற கா்நாடகம், ஆந்திர மாநிலங்கள் நிவாரணம் வழங்குவதை போல தமிழக அரசும், நிவாரணம் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை வழங்கும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.4 மானியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மானியத்தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிபாதியாக பகிா்ந்து அளிக்க உள்ளன. தமிழக அரசின் இந்த முடிவை, கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை கூடியது. இக்கூட்டத்துக்கு அதன் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமை வகித்தாா்.

மா விவசாயிகளுக்கு ரூ. 4 மானியம் வழங்கும் அரசின் முடிவை வரவேற்பதாகவும், எந்த அடிப்படையில் மானியம் நிா்ணயம் செய்யப்படுகிறது என்பதை விளக்க வேண்டும். அரசின் முடிவை, நிகழாண்டிலேயே இதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மா விவசாயிகள் கூட்டமைப்பின் கே.எம். செளந்தராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசுடன் இணைந்து, மா விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 4 மானியம் வழங்க தமிழக அரசு முடிவெடித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக, தமிழக முதல்வா், வேளாண் துறை அமைச்சா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மா சாகுபடியை பாதுகாக்கும் வகையில் சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அரசு சாா்பில் மாங்கூழ் தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments