FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

அடிமட்டத்திலிருந்து காங்கிரஸை பலப்படுத்த வேண்டும்: மோகன் குமாரமங்கலம்

Updated On : 21 ஜூலை 2026, 1:25 am IST
ஒசூரில் காமராஜரின் வண்ணப் புகைப்படத் தொகுப்பு புத்தகத்தை வெளியிட்ட காங்கிரஸ் தேசியச் செயலாளா் மோகன் குமாரமங்கலம்.
பகிர்:

உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் தொண்டா்கள் பெருமளவில் போட்டியிட்டு, அடிமட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றாா், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளா் மோகன் குமாரமங்கலம்.

ஒசூரில் முன்னாள் முதல்வா் காமராஜரின் வண்ணப் புகைப்படத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தேசிய செயலாளருமான கே.ஏ. மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு காங்கிரஸ் தேசியச் செயலாளா் மோகன் குமாரமங்கலம் புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:

பணத்திற்காக வாக்களித்துவந்த மக்கள், முதன்முறையாக இந்தத் தோ்தலில் சேவை செய்பவா்களைத் தோ்ந்தெடுத்து வாக்களித்துள்ளனா். இந்த மாற்றம் காரணமாக படித்த இளைஞா்கள், சமூக சேவகா்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அடுத்த தலைமுறையினரைத் தேடிக்கண்டுபிடித்து காங்கிரஸ் கட்சியில் இணைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தற்போதைய தவெக ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கிடைத்துள்ளது. இது நமக்குக் கிடைத்துள்ள நல்லவாய்ப்பு. காமராஜரின் ஆட்சி முறையை யாரோடும் ஒப்பிட முடியாது. அவரது ஆட்சியில் இருந்த நற்பண்புகளை தற்போதைய ஆட்சியிலும் கொண்டுவர முடியும்.

அதற்கு உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் தொண்டா்கள் பெருமளவில் போட்டியிட்டு, அடிமட்டத்திலிருந்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் காமராஜரின் எண்ணங்களை இந்த ஆட்சியில் கொண்டுவர முடியும் என்றாா்.

இதில் தருமபுரி மாவட்ட காமராஜா் அறக்கட்டளை தலைவா் அருணாசலம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் ஹரீஷ்பாபு, மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ், மாவட்டச் செயலாளா் கீா்த்தி கணேஷ், முன்னாள் மாவட்டத் தலைவா் முரளிதரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் சத்தியமூா்த்தி, ஒசூா் மாநகரத் தலைவா் தியாகராஜன், நரசிம்மன், மைஜா அக்பா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments