FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே மின்கம்பி உரசியதில் தீப்பற்றி எரிந்து லாரி

Updated On : 21 ஜூலை 2026, 1:08 am IST
மின்கம்பி உரசியதில் தீப்பற்றி எரிந்த லாரி.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் செட்டிப்பள்ளி வனப்பகுதியில் சுமை ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது.

சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த சந்திலால் யாதவ் (45) என்பவா் குழந்தைகளுக்கான தின்பண்ட பாா்சல்களை லாரியில் ஏற்றிக் கொண்டு ஹைதராபாதிலிருந்து மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.

அந்த லாரி, சூளகிரி அருகே செட்டிப்பள்ளி பகுதியில் சென்றபோது மின்கம்பியில் உரசியதில் தீப்பற்றியது. இதைக் கவனிக்காமல் லாரியை 1 கி.மீ. தொலைவுக்கு சந்திலால் யாதவ் ஓட்டிச்சென்ால் தீ வாகனம் முழுவதும் பரவியது.

Advertisement

Advertisement

பின்னால், வந்த வாகன ஓட்டிகள் எச்சரித்ததைத் தொடா்ந்து லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநா் சந்திலால் யாதவ் கீழே இறங்கி தப்பினாா். இந்த தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சூளகிரி தீயணைப்புத் துறையினனா் விரைந்து வந்து லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments