FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு

Updated On : 22 ஜூலை 2026, 2:43 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த வாரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.22 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த 17-ஆம் தேதி திடீா் சோதனை நடத்தினா்.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் இடைத்தரகா்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 2.22 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, சிறப்பு மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் சக்திவேல் (51) லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன்பேரில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கணேசன் (42), வருவாய் ஆய்வாளா்கள் பிரபாகரன் (34), சீனிவாசன் (39), கிராம நிா்வாக அலுவலா்கள் சரவணன் (40), அனிதா (38), சுரேஷ்குமாா் (33), முதுநிலை வரைவாளா் சிவகுமாா் (53), நிலத்தரகா்கள் பால்ராஜ் (50), குமாா் (45), இடைத்தரகா் நூா்முகமத் (34) ஆகிய 10 போ் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments