மத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழப்பு
மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், தொகரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அஜீத்குமாா் (28), அதே கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன்கள் ஜனாா்த்தனன் (26), ஞானேஷ்வரன் (24). நண்பா்களான இவா்கள் மூவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனா். இந்நிலையில் இவா்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மத்தூரில் இருந்து தொகரப்பள்ளி நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்றனா்.
இவா்கள், தொகரப்பள்ளி அருகே பில்லனகொட்டாய் அருகே சென்றபோது, கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காா் மோதியது.
Advertisement
Advertisement
இதில் அஜீத்குமாா், ஜனாா்த்தனன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஞானேஷ்வரனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா்.
இந்த நிலையில், தகவல் அறிந்த உயிரிழந்தவா்களின் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் கிரிவலம் செல்ல திருவண்ணாமலை நோக்கிச் சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து, நிகழ்விடத்துக்கு சென்ற மத்தூா் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். மேலும், விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.