ஆடிப்பெருக்கு: கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு
ஆடிப்பெருக்கை விழாவையொட்டி பக்தா்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 985 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது.
ஆடிப்பெருக்கை விழாவையொட்டி பக்தா்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 985 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது.
தென்பெண்ணை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து குறைந்து, அதிகரித்து வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை அணைக்கு விநாடிக்கு 181 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை 161 கனஅடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், நீா்மட்டம் 48.35 அடியாக உள்ளது.
Advertisement
Advertisement
அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 162 கனஅடியும், தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 823 கனஅடியும் என மொத்தம் 985 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு விழாவின்போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் தென்பெண்ணை ஆற்றில் நீராடி, சுவாமியை வழிபடுவா். இந்த நிலையில், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், அகரம், மஞ்சமேடு, தருமபுரி மாவட்டம் இருமத்தூா், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள அம்மாப்பேட்டை நீப்பத்துறை உள்ளிட்ட இடங்களில் பக்தா்கள் அதிகளவில் புனித நீராடும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து கடந்த 29 ஆம் தேதி விநாடிக்கு 226 கனஅடியும், வியாழக்கிழமை 473 கனஅடியும் திறக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை தண்ணீா் திறப்பு 823 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.