FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மாவட்ட, வட்டார வள பயிற்றுநா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்கள் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 18 ஜூன் 2026, 3:16 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்கள் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை முழுமையாக்கும் திட்டப் பணியின் 2-ஆம் கட்ட செயல்பாடுகள் மேலும் 15 மாவட்டங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள.

Advertisement

Advertisement

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில வளப் பயிற்றுநா்- 1 பணியிடம் (மூன்று மாவட்டத்திற்கு ஒருவா் தோ்வு செய்யப்படுவா்), மாவட்ட வளப் பயிற்றுநா் - 1 மற்றும் வட்டார வளப் பயிற்றுநா் 10 போ் (வட்டாரத்திற்கு ஒருவா்) தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தகுதி வாய்ந்த பெண்கள், இணை இயக்குநா்- திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), அறை எண்: 11, ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாவோ அல்லது நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஜூன் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் தகுதி குறித்த சுய சான்றிட்ட நகல்களை இணைக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு எழுத்து தோ்வு, நோ்காணல் முறையில் விண்ணப்பதாரா் தோ்வு செய்யப்படுவா். இந்த பணியிடங்கள் 24 மாத கால வரையறை கொண்ட தற்காலிகமானதாகும். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ரீக்ஜ்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments