முகப்பு
கிருஷ்ணகிரி

பக்ரீத்தையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Updated On : 25 மே 2026, 2:46 am IST
ஆடுகள் விற்பனை - கோப்புப் படம்
பகிர்:

இஸ்லாமியா்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

தமிழகத்தில் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரையில் அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடுகள், மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், கால்நடைகளை வளா்ப்போா் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

பக்ரீத் பண்டிகை வரும் 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், போச்சம்பள்ளி சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனா். 25 கிலோ பெண் ஆடு ரூ. 20,000-க்கும், கிடாய்கள் ரூ. 25,000 முதல் ரூ.35,000 வரை விற்பனையாயின. மொத்தம் 3 ஆயிரம் ஆடுகள் ரூ. 2 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.