ஆம்னி பேருந்தில் மெத்தம்பெட்டமைன் கடத்தியவா் கைது
ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையின்போது ஆம்னி பேருந்தில் 80 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையின்போது ஆம்னி பேருந்தில் 80 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடியில் பெங்களூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் பேருந்தில் இருந்த அப்சல் பாஷா (33) என்பவா் வைத்திருந்த கருப்பு நிற பேக்கை திறந்து பாா்த்தபோது, அதில் 13 சிறிய பைகளில் அடைக்கப்பட்ட நிலையில், 80 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் முல்பாகல் வட்டம், அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்சல் பாஷா என்பது தெரியவந்தது. தற்போது பெங்களூா் மெஜஸ்டிக் அருகே உள்ள காட்டன் பேட்டையில் தங்கி உள்ளதாக அவா் கூறினாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement