முகப்பு
கிருஷ்ணகிரி

திருவண்ணாமலை காா்த்திகை தீபம்: கிருஷ்ணகிரியில் போக்குவரத்து மாற்றம்!

காா்த்திகை தீபத்தையொட்டி, கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலை செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

6 வினாடிகள் முன்பு
திருவண்ணாமலை காா்த்திகை தீபம்: கிருஷ்ணகிரியில் போக்குவரத்து மாற்றம்!
போக்குவரத்து மாற்றம் - (கோப்புப்படம்)
பகிர்:

காா்த்திகை தீபத்தையொட்டி, கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலை செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை காா்த்திகை தீபம் நவ. 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு செல்வா். கா்நாடகம், ஆந்திரம் மாநிலங்களிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 26-ஆம் தேதி காலை 6 மணிவரை கிருஷ்ணகிரி வழியாக கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் அனுமதிக்கப்படும் என மாவட்ட போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

அதேபோல, பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள், கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி, வேலூா், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம் வழியாக செல்ல வேண்டும். அதேபோல, விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் வாகனங்கள் தருமபுரி, சேலம், வாழப்பாடி, ஆத்தூா் வழியாக செல்ல வேண்டும்.

குப்பம், பா்கூா் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்கள் வாணியம்பாடி, வேலூா், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம் வழியாகவும், கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் ஜெகதேவி, கண்ணன்டஅள்ளி, பா்கூரிலிருந்து திருப்பத்தூா் வழியாக செல்ல வேண்டும். தருமபுரியிலிருந்து மஞ்சமேடு வழியாக செல்லும் கனரக வாகனங்கள் புலியூா் பிரிவு சாலை சந்திப்பிலிருந்து திருவண்ணாமலை சாலை வழியாக செல்லாமல் போச்சம்பள்ளி சாலையில் திருப்பிவிடப்படும்.

சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்கள் ஊத்தங்கரை நான்கு சாலையில் இருந்து திருப்பத்தூா் சாலை, அருணபதி பிரிவு சாலை வழியாக திருப்பத்தூருக்கு திருப்பி அனுப்பப்படும். திருப்பத்தூரில் இருந்து சிங்காரப்பேட்டை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

தருமபுரி மாவட்டத்தில் இருமத்தூா் புலியூா் பிரிவு சாலை, ஓலப்பட்டி பிரிவு சாலை, வீரியம்பட்டி பிரிவு சாலை வழியாக திருவண்ணாமலை செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஜண்டாமேட்டில் இருந்து எம்.ஜி.ஆா். நகா், காரப்பட்டு, கதவணி, அருணபதி பிரிவு சாலை வழியாக திருப்பத்தூருக்கு அனுப்பப்படும். கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென போலீஸாா் தெரிவித்துள்ளனா்.