முகப்பு

குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்

குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து...

குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகையையொட்டி, சென்னையில் சில பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நவ. 21-ஆம் தேதி வருகிறாா். நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, நவ. 22-ஆம் தேதி புறப்பட்டு செல்கிறாா்.

இந்த இரு நாள்களிலும் சென்னையில் மீனம்பாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, கிண்டி, மயிலாப்பூா் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் பகுதிகளில் ட்ரோன், ஹாட் பலூன், ட்ரோன் கேமராக்கள், பாரா கிளைடா்ஸ், மைக்ரோ லைட் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும், குடியரசு துணைத் தலைவரின் பயணத்தின்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் 'பூஜ்ஜிய போக்குவரத்து' நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 21-ஆம் தேதி – பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம்

• தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு, குன்றத்தூர் சாலை வழியாகச் செல்லலாம்.

• பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் பன்னாட்டு விமான நிலைய சந்திப்பு (ஹோட்டல் ஏர்வே) பகுதியில் திருப்பிவிடப்பட்டு, தாம்பரம் நோக்கிச் செல்லலாம்.

• போரூரிலிருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு, வடபழனி வழியாகச் செல்லலாம்.

• அசோக் பில்லரிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் (CIPET) சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு, கிண்டி தொழிற்பேட்டை நோக்கிச் செல்லலாம்.

• அண்ணா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.சி. ராஜா யு-டர்ன் பகுதியில் திருப்பிவிடப்படும்.

• அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் எல்.பி. சாலை பகுதியில் திருப்பிவிடப்படும்.

• ஓ.எம்.ஆர். பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியில் திருப்பிவிடப்படும்.

• இ.சி.ஆர். பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அக்கரை சந்திப்பில் திருப்பிவிடப்படும்.

நவம்பர் 22-ஆம் தேதி – காலை 8 மணி முதல் 10.30 மணி வரை போக்குவரத்து மாற்றம்

1. அடையாறிலிருந்து பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்லும் வாகனங்கள்:

அடையாறிலிருந்து பாரிஸ் கார்னர் நோக்கி வரும் வாகனங்கள் கிரீன்வேஸ் சந்திப்பில் திருப்பிவிடப்படும். அங்கிருந்து கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, டி.டி.கே. சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, ஆர்.கே. சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கை அடையலாம்.

2. பாரிஸ் கார்னரிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள்:

பாரிஸ் கார்னரிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் திருப்பிவிடப்படும். அங்கிருந்து வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கை அடையலாம்.

பொதுமக்களுக்குப் போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்

போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் எனச் சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

summary

Vice President C.P. Radhakrishnan to visit Chennai today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.