பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(அக்.11) அறிவிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து...
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(அக்.11) போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை(அக்.11) சென்னை வருகையை முன்னிட்டு, நகரில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (அக்.11) காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னையின் முக்கிய சாலைகளில் வணிக மற்றும் கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
Advertisement
Advertisement
போக்குவரத்து மாற்றங்கள் விவரம்:
1. ஜி.எஸ்.டி. சாலை – தாம்பரம் பகுதி
* தாம்பரத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் குன்றத்தூர் சாலை நோக்கித் திருப்பிவிடப்படும்.
* பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள், இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சந்திப்பு (ஹோட்டல் ஏர்வே அருகில்) பகுதியில் தாம்பரம் நோக்கித் திருப்பிவிடப்படும்.
2. ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை – கத்திப்பாரா மேம்பாலம்
* கோயம்பேட்டிலிருந்து வரும் வாகனங்கள் அசோக் நகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் கோயம்பேடு அல்லது கே.கே. நகர் நோக்கித் திருப்பிவிடப்படும்.
* அசோக் பில்லர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் சந்திப்பில் கிண்டி தொழிற்பேட்டை நோக்கித் திருப்பிவிடப்படும்.
3. மவுண்ட் – பூந்தமல்லி சாலை
* மவுண்ட் – பூந்தமல்லி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் போரூர் சுங்கச்சாவடியில் மதுரவாயல் நோக்கித் திருப்பிவிடப்படும்.
* அதே சாலையில் வரும் வாகனங்கள் ராமாபுரம் சந்திப்பில் அரசமரம் சந்திப்பு நோக்கித் திருப்பிவிடப்படும்.
4. சர்தார் படேல் சாலை – லோக் பவன் பகுதி
* பழைய மகாபலிபுரம் சாலை (ஒஎம்ஆர்) மற்றும் சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் சிபெட் நோக்கித் திருப்பிவிடப்படும்.
* காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களும் காந்தி மண்டபம் சந்திப்பில் சிபெட் நோக்கித் திருப்பிவிடப்படும்.
5. வேளச்சேரி பிரதான சாலை
வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து சர்தார் படேல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் குருநானக் சந்திப்பில் வேளச்சேரி நோக்கித் திருப்பிவிடப்படும்.
6. அண்ணா சாலை – லோக் பவன் பகுதி
* அண்ணா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.சி. ராஜா யு-டர்ன் பகுதியில் மீண்டும் அண்ணா சாலை திசையில் திருப்பிவிடப்படும். பின்னர், வாகன ஓட்டிகள் தங்களது இலக்குகளை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்
போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் நேரத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அறிவிக்கப்பட்டுள்ள மாற்றுப் பாதைகளைப் பின்பற்றி, பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
PM Modi's visit to Chennai: Traffic changes on Oct. 11
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.