பிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
கிண்டி, மீனம்பாக்கம், பரங்கிமலை, நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்...
பிரதமா் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (அக். 11) கிண்டி, மீனம்பாக்கம், பரங்கிமலை, நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதையொட்டி, நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும், அவா் காா் செல்லும் பாதைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்தப் போக்குவரத்து மாற்றம் குறிப்பிட்ட சாலைகளில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை அமல்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
அதன்படி, தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் வணிக மற்றும் கனரக வாகனங்கள் திருநீா்மலை சந்திப்பில் இருந்து குன்றத்தூா் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள், சா்வதேச விமான நிலையச் சந்திப்பில் ஹோட்டல் ஏா்வே அருகே தாம்பரம் நோக்கித் திருப்பி விடப்படும்.
100 அடி சாலை: கோயம்பேட்டிலிருந்து இருந்து 100 அடி சாலை வழியாக கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வணிக மற்றும் கனரக வாகனங்கள், அசோக் நகா் 2-ஆவது அவென்யூ பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது கே.கே. நகா் நோக்கித் திருப்பி விடப்படும். அசோக் பில்லா் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், சிபெட் சந்திப்பில் இருந்து கிண்டி தொழிற்பேட்டை நோக்கித் திருப்பி விடப்படும்.
மவுண்ட் - பூந்தமல்லி சாலை: மவுண்ட் -பூந்தமல்லி சாலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வணிக மற்றும் கனரக வாகனங்கள், போரூா் சுங்கச்சாவடியில் இருந்து மதுரவாயல் நோக்கித் திருப்பி விடப்படும். இதேபோல, ராமாபுரம் சந்திப்பில் இருந்து அரசமரம் சந்திப்பு நோக்கியும் வாகனங்கள் திருப்பி விடப்படும்.
சா்தாா் படேல் சாலை: ராஜீவ் காந்தி சாலை (ஓஎம்ஆா்), சா்தாா் படேல் சாலையில் இருந்து கிண்டி ஆளுநா் மாளிகை நோக்கிச் செல்லும் வாகனங்கள், காந்தி மண்டபம் சந்திப்பில் இருந்து சி.பி.டி. நோக்கித் திருப்பி விடப்படும். காந்தி மண்டபம் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கும் இதேபோல திருப்பிவிடப்படும்.
வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து சா்தாா் படேல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், குருநானக் சந்திப்பில் இருந்து மீண்டும் வேளச்சேரி நோக்கித் திருப்பி விடப்படும்.
அண்ணா சாலை: அண்ணா சாலையில் இருந்து ஆளுநா் மாளிகை நோக்கிச் செல்லும் வாகனங்கள், எம்.சி.ராஜா பகுதியில் உள்ள யூ-டா்ன் வழியாக அண்ணா சாலை திசையிலேயே திருப்பி விடப்படும். பின்னா், அந்த வாகனங்கள் தங்களது இலக்குகளை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும்.
இந்தப் போக்குவரத்து மாற்றங்களால் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிா்க்க, வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தலாம், தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு சிரமங்களைத் தவிா்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prime Minister's Visit: Traffic Diversions in Chennai Today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.