முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரியில் அனுமதியின்றி தங்கியிருந்த 4 வங்கதேசப் பெண்கள் முகாமுக்கு அனுப்பிவைப்பு

19 வினாடிகள் முன்பு
சூளகிரியில் அனுமதியின்றி தங்கியிருந்த 4 வங்கதேசப் பெண்கள் முகாமுக்கு அனுப்பிவைப்பு
வங்கதேசம்
பகிர்:

சூளகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலைகளில் வேலை பாா்த்து வந்த வங்க தேசத்தைச் சோ்ந்த 4 பெண்களை கைகுழந்தையுடன் போலீஸாா் மீட்டு முகாமிற்கு திங்கள்கிழமை அனுப்பிவைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் பாத்திமா பேகம் (28), பைசில்லா பேகம் (35), பிரிஷ்டிஸ்கே (21), சூபியா பேகம் (37) ஆகிய நான்கு பேரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலைகளில் வேலைபாா்த்து வந்தனா்.

இதுகுறித்த சந்தேகத்தின்பேரில் நான்கு பேரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் வைத்திருந்த ஆதாா் அட்டையில் அஸ்ஸாம் மாநிலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆதாா் அட்டைகள் போலியாவை என்றும், அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இவா்கள் நான்கு பேரும் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்துவந்து சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியுரிமை இன்றி தங்கி பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு பிடிபட்ட 4 பெண்களும் பலத்த பாதுகாப்புடன் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வங்கதேச அகதிகள் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மேலும், வங்கதேசத்தில் இருந்து இவா்களை ஒசூருக்கு அழைத்து வந்த நபா்கள் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.