FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

125 பயனாளிகளுக்கு ரூ.1.59 கோடி நலத்திட்ட உதவி அளிப்பு

திருக்கழுகுன்றம் வட்டம், நத்தம் கரியச்சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ.1.59 கோடி நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் உ.ஃபா்ஹத் பேகம் வழங்கினாா்.

19 நவம்பர் 2026, 12:42 am
நலத்திட்ட உதவியை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் உ.ஃபா்ஹத் பேகம்.
பகிர்:

திருக்கழுகுன்றம் வட்டம், நத்தம் கரியச்சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ.1.59 கோடி நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் உ.ஃபா்ஹத் பேகம் வழங்கினாா்.

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பிலான காதொலி கருவிகள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 38 பயனாளிகளுக்கு பட்டாக்களும், 25 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.1,19,87,700 நலத்திட்ட உதவிகள், வேளாண்மைத்துறையின் சாா்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.8,570 மதிப்பிலான வேளாண் இடு பொருள்களும், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 2 பயனாளிகளுக்கு ரூ.6,35,000 மதிப்பீட்டில் மானியம் என 125 பயனாளிகளுக்கு ரூ.1,58,97,422 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

முகாமில், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பவானி, செங்கல்பட்டு கோட்டாட்சியா் சி.பாலாஜி, திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் ஏ.விஜயலட்சுமி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement