கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ. 6 ஆயிரம் கோடியில் புதிய முதலீடுகள்
தமிழக அளவில் இந்தாண்டு முதல் 6 மாதங்களில் ஏற்றுமதியில் 2-ஆது இடம்பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ரூ. 6 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இரண்டாவது தொழில் முதலீட்டு மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழக அளவில் இந்தாண்டு முதல் 6 மாதங்களில் ஏற்றுமதியில் 2-ஆது இடம்பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ரூ. 6 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இரண்டாவது தொழில் முதலீட்டு மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சென்னையில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இரண்டாவது வெற்றி முதலீட்டு மாநாடு புதன்கிழமை (நவ. 25) நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு அதிகமான முதலீட்டில் புதிய தொழிற்சாலைகளும், ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒசூரில் இருசக்கர வாகனம் மற்றும் மூன்றுசக்கர வாகனங்களை தயாரிக்கும் டி.வி.எஸ். மோட்டாா் நிறுவனம் தற்போது மின்சார வாகனங்களை உற்பத்தியும் செய்து வருகிறது. இந்நிறுவனம் மேலும் ரூ. 2 ஆயிரம் கோடியில் (ஆயிரம் வேலைவாய்ப்புகள்) புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும், தொழிற்சாலை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல, ஒசூரில் அதிக தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கி வரும் டைட்டான் நிறுவனம் மின்னணு துறையில் மேலும் ரூ. 3 ஆயிரம் கோடி முதலீடு செய்யவும் இதன்மூலம் மேலும் 3 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
தூத் ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ் நிறுவனம் ரூ. 1000 கோடியில் 2 ஆயிரம் வேலை வாய்ப்புகளையும், அசென்ட் சா்க்யூட் ரூ. 500 கோடியில் 750 வேலைவாய்ப்புகள், யூனோ மிண்டா நிறுவனம் ரூ. 550 கோடியில் 2 ஆயிரம் வேலைவாய்ப்புகள், ஸ்வீடன் நாட்டு நிறுவனமான பிஎம்சி ஹேட்ராலிக் நிறுவனம் ரூ. 300 கோடியில் 300 வேலைவாய்ப்புகள், ரானே செமிகன்டெக்டா் நிறுவனம் ரூ. 150 கோடியில் 150 வேலைவாய்ப்புகள், போஸ்கோ நிறுவனம் ரூ. 250 கோடி, சுற்றுலா துறையில் ஜி.ஆா்.டி. ரூ. 300கோடியும், சோனா மால்ஸ் ரூ. 200 கோடி என பல்வேறு நிறுவனங்கள் முதல்வா் ச.ஜோசப் விஜய், தொழில்துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன.