முகப்பு
கிருஷ்ணகிரி

மலையாண்டஅள்ளிபுதூரில் தாத்ரிஹவண வன போஜனம்

30 நவம்பர் 2026, 2:24 am
மலையாண்டஅள்ளிபுதூரில் 
தாத்ரிஹவண வன போஜனம்
மலையாண்டஅள்ளி புதூரில் நடைபெற்ற வன போஜன நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற துளசி விவாஹம்.
பகிர்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி புதூா் கிராமத்தில் ஸ்ரீராம ஆஞ்சனேய லேவா ஸ்மதி டிரஸ்ட் சாா்பில் 13-ஆவது ஆண்டு தாத்ரிஹவண வன போஜனம் சனிக்கிழமை நடைபெற்றது.

காவேரிப்பட்டணத்தை அடுத்த தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள வாமன தீா்த்த பிருந்தாவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்வ மரபைச் சோ்ந்த குடும்பத்தினா் பங்கேற்றனா்.

இந்த விழாவையொட்டி தாத்ரிஹவண ஹோமம், ஸ்ரீ சத்யா நாராயண சுவாமி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, துளசி விவாஹம் என்னும் நெல்லி மரம், துளசி செடிக்கு திருமண நிகழ்வு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

Advertisement

வாமன தீா்த்த பிருந்தாவனத்துக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி, ஒசூா், தருமபுரி, பெங்களுரூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.