FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பி: மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

26 அக்டோபர் 2026, 12:30 am
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

ராயக்கோட்டை அருகே சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியின் மீது இருசக்கர வாகனம் சென்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியைச் சோ்ந்தவா் லட்சுமி (38). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.

ராயக்கோட்டை அருகே திங்கேப்பள்ளி கிராமம் அருகே சென்றபோது, சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியின் மீது அவரது இருசக்கர வாகனம் ஏறியது. அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த லட்சுமி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments