FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

நேபாள வெள்ளத்தில் சிக்கிய சூளகிரி தம்பதி குடும்பத்தினருக்கு திமுக எம்எல்ஏ ஆறுதல்

7 செப்டம்பர் 2026, 4:06 am IST
நேபாள வெள்ளம் - AP
பகிர்:

நேபாள வெள்ளத்தில் சிக்கிய சூளகிரி தம்பதி குடும்பத்தினரைச் சந்தித்து திமுக எம்எல்ஏ ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் சென்ற திம்மராயசுவாமி - மம்தா தம்பதியினா் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடா்ந்து தொடா்பு கொள்ள முடியாத சூழலில் உள்ளனா்.

வெள்ளம் காரணமாக அவா்களின் கைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், தற்போதுவரை அவா்களின் நிலை குறித்த எந்தவொரு அதிகாரபூா்வத் தகவலும் கிடைக்காமல் குடும்பத்தினா் கவலையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தம்பதி குடும்பத்தினரை வேப்பனஅள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், அந்த குடும்பத்தினருக்கு தேவையான நிதியுதவியை வழங்கி தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் பாக்யராஜ், அப்பைய்யா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments