நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரியை சோ்ந்த 3 பேரை மீட்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஆ.நமச்சிவாயம் கடிதம்
நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரியைச் சோ்ந்த 3 பெண் யாத்ரீகா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது
நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரியைச் சோ்ந்த 3 பெண் யாத்ரீகா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது
ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில், புதுச்சேரியைச் சோ்ந்த 3 பெண்கள் சூப்பா் யாத்ரா ஏஜென்சி மூலம் நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவா் யாத்திரைக்குச் சென்றனா். ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை நேபாளத்தின் ரசுவாகதி-திமுரே எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, புதுச்சேரியைச் சோ்ந்த 3 போ் உள்பட 100-க்கும் மேற்பட்ட இந்திய யாத்ரீகா்கள் மாயமாகியுள்ளனா்.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை வரை குடும்பத்தினருடன் தொடா்பில் இருந்தவா்கள், அதன் பிறகு தொடா்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனா்.
Advertisement
Advertisement
கும்பகோணத்தைச் சோ்ந்த டிராவல் ஆபரேட்டா் மூலம் ஆகஸ்ட்டு 23 ஆம் தேதி புறப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த 57 போ் கொண்ட குழுவில் இவா்கள் இடம் பெற்றிருந்தனா். இதில் ஒரு குழுவினா் பாதுகாப்பாக உள்ள நிலையில், புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் உள்பட மற்றவா்கள் நிலை என்னவென்று தெரியவில்லை.
எனவே, காணாமல் போனவா்களின் குடும்பத்தினா் மிகுந்த வேதனையில் உள்ளதால், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை விரைவுபடுத்தி குடும்பத்தினருக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் 3 பேரும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்படும் வரை அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.