FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் விஜய் கடிதம்

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
முதல்வா் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

கடந்த ஆக.12-ஆம் தேதி இரவு இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்துள்ளனா். இந்த மாதத்தில் மட்டும் இதுபோன்று இரு சம்பவங்கள் நடந்துள்ளன.

Advertisement

Advertisement

தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே, குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணா்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 49 தமிழக மீனவா்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

எனவே, தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களையும் அவா்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்து, அவா்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இவ்விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் விஜய்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments